மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும் மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக் கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய் உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால் உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன் தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே