மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர் வரையுள தாதலால் மகனே எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய் தெழில்உறு மங்கலம் புனைந்தே குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக் கோலத்தால் காட்டுக எனவே வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே