மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக் கருளமு தருளுக போற்றி பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே பாடுதல் வேண்டும்நான் போற்றி தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத் தாங்குக போற்றிநின் பதமே