மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால் புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றிஅப்பா நாரணன்தன் கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ