மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம் எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற் றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன் அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன் உண்ண நல்அமு தனையஎம் பெருமான் உனைஅ லால்எனை உடையவர் எவரே