மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக் கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின் பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே