மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம் கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன் நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய் அசைப்பிலே - படிவேறுபாடு ஆ பா