மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடு கின்றேன் விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது மெல்அடிக் கடிமைசெய் வேனோ கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே கடவுளே கருணையங் கடலே