மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன் மலரடி வழுத்திடச் சிறிதும் எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில்வந் தருள்விழி விருந்தே கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே காட்சியே ஒற்றியங் கரும்பே