மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால் எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன் புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக் கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே