மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே