மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய் மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ் வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி() நடுவே பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும் பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல் நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான் நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி () இந்தவெளி - பி இரா பதிப்பு