மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய் சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே