மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான் மற்றவற் றுட்புறங் கீழ்மேல் அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின் கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும் கருதுரு முதலிய விளங்க நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று நவின்றனர் திருவடி நிலையே