மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன் வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன் இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன் குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன் சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன் தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே