மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக் கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம் பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்தெனை அழிவிலா நல்ல பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே