மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார் பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார் இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே