மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய் பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம் சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே