மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர் விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக் கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்