மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத் துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும் வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே