மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம் வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக் கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும் கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப் பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன் துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே