மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன் மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன் பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன் பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன் பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணி யாஅருட் போதக நாதா துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத் துஎய னேபசுந் தோகைவா கனனே
மதியில் விளைந்த மருந்து - யார்க்கும் மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து கதிதரும் இன்ப மருந்து - அருட் கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து ஞான