மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால் வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே