மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை மயலேறி விருப்பேறி மதத்தி னோடு பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேயேறி நலிகின்ற பேதை யானேன் வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல் மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார் ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இதுதகுமோ உணர்கி லேனே