மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச் சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித் தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித் தானாகித் தனதாகித் தானான் காட்டா அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய் அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே