மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம் நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே
மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம் எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே