மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன் இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன் கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே