மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச் சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே இனம்எனப்பேர் அன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே