மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ மறதியினா லோஎனது வருத்தமத னாலோ தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல் சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச் சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார் ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே