மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார் பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே