மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும் தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான் சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே