மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான் சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே