மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய் மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே