மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே