மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன் பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே தன்னில் நின்றிடும் தணிகை மேலனே
மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே ஏழைமையின் இரங்கல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்