மன்னே எனைஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் அன்னே வடிவேல் அரசே சரணம் அறுமா முகனே சரணம் சரணம் கன்னேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்
மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே