மன்றஓங் கியமா மாயையின் பேத வகைதொகை விரிஎன மலிந்த ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா உற்றன மற்றவை எல்லாம் நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க நின்றசத் திகளொடு சத்தர் சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திருவடி நிலையே