மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன் என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள் முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள் ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே