மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார் நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ