மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று கன்றின் அயர்ந்தழும்என் கண்ணீர் துடைத்தருள என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே