மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும் குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றிஅப்பா என்னுடைய வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ
மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில் ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா