மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத் துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால் இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால் இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே