மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான் மறப்பனோ கனவினும் என்றாள் உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர்தரி யாதெனக் கென்றாள் கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக் கடலமு தளித்தருள் என்றாள் வயங்குசிற் சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே