மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய் உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய் இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே