மருகா வொற்றி வாணர்பலி வாங்க வகையுண் டேயென்றேன் ஒருகா லெடுத்தேன் காணென்றா ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன் வருகா விரிப்பொன் னம்பலத்துள் வந்தாற் காட்டு வேமென்றார் அருகா வியப்பா மென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே