மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால் இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால் ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே