மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித் தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம் சிவந மாஎனச் செப்பிநம் துயராம் அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே