மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன் தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன் சிவபி ரான்பெற்ற செல்வமே நினது அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன் இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன் என்செய் வான்பிறந் தேன்எளி யேனே