மருந்தானை மணியானை வழுத்தா நின்ற மந்திரங்க ளானானை வான நாட்டு விருந்தானை உறவானை நண்பி னானை மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப் பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப் பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும் இருந்தானை இருப்பானை இருக்கின் றானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே