மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும் திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே